Kombu

Discover the Kombu

discover Dr Vijaykumar

Dr Vijayakumar Muthusamy

Dr Vijaykumar is the founder of Kombu Marabisiai Maiyam. He founded this team with a passion of rejuvenate the traditional Tamil music instruments in the USA. Started with one instrument (Parai) and now we have been establishing ourself with multiple traditional instruments like Thavil, Pambai, Urumi, Thanummai, Murasu, Kombu, Udukai, Parai Kolusu etc,. We have been performing across the different states in the USA.

திரு விஜய், கொம்பு மரபிசை குழுவின் நிறுவனர், பயிற்றுனர்,  ஒருங்கிணைப்பாளர். அமெரிக்காவில் நம்முடைய பாரம்பரிய இசைக்கருவிகளுக்கும், நாட்டுப்புற ஆடல் கலைகளுக்கும் மிகுந்த வரவேற்பு உள்ளது. எங்களுடைய பயணம் வாஷிங்டன் வட்டாரத் தமிழ் சங்கத்தில் தொடங்கி, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) Fetna,டெலவார், ரிச்மண்ட் என அருகில் உள்ள அனைத்து தமிழ் சங்கங்களிலும் கால் பதித்துள்ளோம். இன்னும் நாங்கள் மட்டும் குரல் கொடுக்காமல் அனைத்து NGO க்களும் மரபிசையின் முக்கியத்துவம் உணர்ந்து ஆதரித்தால் மேலும் சிறப்பாக இருக்கும். மரபு கருவிகள் மட்டும் இல்லாமல் அதனை சார்ந்த இசை வடிவம், ஆடல் கலை என அனைத்திலும் எங்கள் கவனம் உள்ளது விஜயகுமார் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். சென்னை ஐஐடி-இல் குவாண்டம் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இயற்பியல் துறையில் ஜெர்மன் மற்றும் அமெரிக்கா பல்கலைக்கழகங்கள் சென்று வேலை செய்து தற்போது அமெரிக்காவில் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தன் குடும்பத்தோடு வசிப்பவர். இப்போது ஐடி- துறையில் பணி புரிகிறார்.

தன் பிள்ளைகளை பியானோ வகுப்பிற்கு அனுப்பும் போது தானும் பியானோ கற்க வேண்டும் என்று ஆவல் கொண்டு அவர்களோடு சேர்ந்து பயிற்சி எடுத்துள்ளார். பியானோ பற்றி மேலும் அறிய இணையத்தில் தேடும்போது தமிழர் மரபிசைக் கருவிகள் அழிந்து வருவதாக உள்ள ஒரு காணொளியைக் கண்டிருக்கிறார். இயற்பியல் துறையில் முனைவர் பட்டம், ஐடி- துறையில் பணி என்று வேறொரு திசையில் பயணிக்கும் இவருக்கு மனிதப் பிறப்பின் நோக்கம், ஒருவர் தன் வாழ்நாளுக்குள் சாதிக்க வேண்டிய பயனுள்ள செயல்கள் என்று ஏதாவது உள்ளதா என்று எண்ணியிருக்கிறார். தன் பிறப்பிற்கான தனித்துவத்தைத் தாமே அங்கீகரிக்கும் வரை மனிதர்களாய்ப் பிறந்த எவரும் அத்தேடலைத் தன் வாழ் நாள் முழுவதும் தொடரலாம் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின் – திருக்குறள்


உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும் என்ற குறளிற்கேற்பத் தமிழர் மரபிசைக் கருவிகள் அதன் வரலாறு பற்றியும் தேட முற்பட்டிருக்கிறார். பல திறமைகள் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை நாம் எப்போதும் கொண்டிருந்தால் நம் வாழ்வு பல புதிய தேடல்களை நோக்கிச் செல்லும், மேலும் நாம் பற்பல செயல்களை முயல்வதற்கும் வித்திடும் என்பது போல “பறை இசை” கற்க முற்பட்டு ஓக்லஹோமா பல்கலைக்கழக முனைவர் ஜோ சி. ஷெரினியன் (Dr. Zoe C. Sherinian) மூலம் பறை இசைக்கப் பயின்றிருக்கிறார். முனைவர் ஜோ சி “தமிழ் நாட்டுப்புற இசை எனும் தலித் விடுதலை இறையியல்” (Tamil Folk Music as Dalit Liberation Theology) என்னும் நூல் ஒன்றை எழுதி இந்தியாவில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் ஒருவருக்கு அமெரிக்கர் பறை இசை பயிற்றுவிக்கிறார் என்றால் தமிழர் மரபிசை தொன்மையான சிறப்புப் பெற்றது என்பதை உணர்ந்திருக்கிறார் முனைவர் விஜயகுமார். அதுவே பின்னர் “கொம்பு நிகழ்த்து கலைகள் மற்றும் ஆராய்ச்சி மையம்” உருவாக வித்திட்டது. .